தமிழில் உள்ள ஒலிகளின், எழுத்துக்களின் உச்சரிப்பினைப் பற்றி என்னுள் எழுந்த தேடலின் பொருளாக நான் இதை எழுதுகிறேன்.
பாரதத்தின் தொன்மையான மொழி தமிழ்தான் என்று பறைசாற்றிக்கொள்வதற்கு முன் நாம் நம் மொழியைப் பற்றி அறிந்துகொள்வது நலம். தமிழுக்கு நிகராக இன்னொரு மொழியை நம் மக்கள் நிருத்துவார்களேயானால், அது சம்ஸ்க்ருதம் ஒன்றுதான். தமிழன் மட்டும்தான் “இந்தியாவிலேயே தொன்மையான மொழி எம் தமிழ் மொழி” என்று கூறுகிறான். மற்ற மாநில மக்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில், அவர்களின் தாய்மொழி எதுவாகினும் அது வடமொழியிலிருந்து உருவாக்கப்பட்டது/இயற்றப்பட்டது என்று அவர் எண்ணுகின்றனர். அதனால், அவர்கள் வடமொழியே தொன்மையானது என்று கூறுவர். அவர்களைப் பொருத்தமட்டில் அது அப்படித்தான். நாம் அதனுள் செல்ல வேண்டாம்.
தமிழில்தான் “ga” உச்சரிப்பு இல்லையே; “ka” மட்டுமல்லவா இருக்கிறது. இதை மற்ற எழுத்துக்களுக்கும் பொறுத்தினால்,
தமிழில் “ja” உச்சரிப்பு இல்லை “ச” மட்டுமே உள்ளதே?!
தமிழில் “da” உச்சரிப்பு இல்லை “ட” மட்டுமே உள்ளதே?!
தமிழில் “dha” உச்சரிப்பு இல்லை “த” மட்டுமே உள்ளதே?!
தமிழில் “ba” உச்சரிப்பு இல்லை “ப” மட்டுமே உள்ளதே?!
பின்பு எப்படி நான் கூறியதைப்போல் தமிழில் இருந்து கன்னடமோ அல்லது தெலுங்கோ பிறந்திருக்கக்கூடுமென்று நிங்கள் ஐயம் கொள்ளலாம்.
தமிழில் எனக்குத் தெரிந்தவரையில், வடமொழியிலுள்ள அனைத்து உச்சரிப்புகளும் உள்ளன. ஆனால், அவற்றை இலக்கண விதிப்படி மட்டுமே பயன்படுத்த இயலும்.
எடுத்துக்காட்டு:
1. ஒழுங்கு - இதன் உச்சரிப்பு ஒழுங்gu. ங் வருவதால், அதை ஒட்டி வந்துள்ள கு - gu என ஒலிக்கிறது.
ஒழுங்gu - ஒழுன்ku
இறுதியில் வரும் ku வை gu என ஒலிக்கச் செய்யவே அங்கு ங் வந்துள்ளது. அப்படி இல்லையென்றால், ஒழுங்ku என ஒலிப்பதற்கு அங்கு ங் தேவையில்லை, ன் வந்திருக்கவேண்டும். இதேபோலத்தான் மற்ற உச்சரிப்புகளும்.
2. இஞ்சி - இதன் உச்சரிப்பு இஞ்ஜி. இங்கு தமிழில் ஜ ஒலி இல்லை என்று கூறுபவர்கள் சிந்திக்க வேண்டும். ஞ் வருவதால், அதை ஒற்றிவரும் 'சி' - ‘ஜி' என ஒலிக்கிறது. இதை வலியுருத்த நம் இலக்கணவிதி கண்டிப்பாக ஒரு கூற்றை இயற்றயிருக்ககூடும். அப்படி இல்லயெனில், அதை நாம் “inchi” என்றே உச்சரித்திருக்க வேண்டும். இப்படி உச்சரிக்க அவ்விடத்தில் ஞ் எதற்கு? ன் போதாதா?? இன்சி - இது எப்படி ஒலிக்கிறது? குழந்தைக்குக் கூட இது பிழையென்று தெரியும்.
3. பண்டம் - இதன் உச்சரிப்பு பண்daம். ண் வருவதால், அதை ஒட்டி வந்துள்ள ட - da என ஒலிக்கிறது.
பண்daம் - பன்taம். எது சரியென்று நீங்களே உணர்வீர்கள்.
4. முந்து - இதன் உச்சரிப்பும் முந்dhu. ந் வருவதால், அதை ஒட்டி வந்துள்ள து - dhu என ஒலிக்கிறது.
முந்dhu - முன்dhu !!!
5. துன்பம் - இதன் உச்சரிப்பு துன்baம். ம் வருவதால், அதை ஒட்டி வந்துள்ள ப - ba என ஒலிக்கிறது.
துன்baம் - துன்paம் !!!
இதைச்சற்று கோர்வையாகப் பார்த்தால்,
1 = க ங
2 = ச ஞ
3 = ட ண
4 = த ந
5 = ப ம
இதை ஒற்றித்தான் வடமொழியை ஹ (ஃ) சேர்த்து உருவாக்கியிருக்கிறார்கள்.
க க்ஹ ga gha ங
ச ச்ஹ ஜ ஜ்ஹ ஞ
ட ட்ஹ da dஹ ண
த த்ஹ dha dhஹ ந
ப ப்ஹ ba bஹ ம
ஹ ஒலியும் கூட வடமொழிக்கு தமிழிலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கக்கூடும். இதை எதிப்பவர்கள், எஃகு என்பதன் உச்சரிப்பை உணரவேண்டும். எஃகு - எhhu என்றே உச்சரிக்கப்பட வேண்டும். ஆக, ஹ ஒலியும் தமிழில் உள்ளது. ஆனால், அதன் பாவனை இலக்கணவிதிப்படி மட்டுமே இருக்கவேண்டும். அஃது என்பதனை அஹ்து என்றும், இஃது என்பதனை இஹ்து என்றும் ஒலித்தல் வேண்டும்.
இவ்வாறான உச்சரிப்பை ஒழுங்குபடுத்த தமிழிலணக்கனத்தில் ஏதேனும் விதி இருந்தாகவேண்டும். தங்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்.