Wednesday, April 14, 2010

தமிழைப் பற்றி தமிழில் - 3

தமிழைப்பற்றி ஒலியியல் வாயிலாக சிந்திக்கையில் எனக்கு புலப்பட்ட உள்ளுருமங்கள் (informations) இவை. பல்லாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழர் இப்படி ஒரு ஆராய்ச்சி செய்து ஒரு மொழியை இயற்றியிருக்கிறார்கள் என எண்ணி வியக்கத்தோன்றுகிறது.

கடந்த முறை சிந்திக்கையில் ga, ja, da, dha, ba ஆகிய ஒலிகள் தமிழில்  இருக்கிறதென்று புரிந்துகொண்டேன். ஆதலால்தான் தமிழிலிருந்து வடமொழிக்கு எடுத்துச் சென்றிருப்பர்.

பின்பு மீண்டும் சிந்திக்கையில் எழுந்த ஐயம் - எதற்காக கங, சஞ, டண, தந, பம ஆகிய ஒலிகளை அறிஞர்கள் இணைத்திருக்கிறார்கள்?
நான் சிந்தித்தவரை: -- என ஒலிக்கும்போது மூக்கின் வழியாக காற்று
வெளியேருவதில்லை.

-- என ஒலிக்கும்போதும் சரி, -- என ஒலிக்கும்போதும் சரி வாயசைவு ஒன்றுதான். -- என ஒலி எழுப்ப -- வை ஒலிக்கச் செய்யும் வாயசைவோடு முக்கையும் பயன்படுத்துகையில் அது -- வாக ஒலிக்கிறது. இதே விதிதான் மற்ற இணைகளுக்கும்(pairs) பொருந்தும்.
-- வானது மூக்கின் உதவியுடன் ஒலிக்கையில் -- வாக ஒலிக்கிறது.

ஒலிப்பதற்கு ஒரே மாதிரியுள்ள ஒலிகளை வேறுபடுத்த இப்படி ஒரு மகத்தான வடிவமைப்பை (architecture) உருவாக்கியுள்ளனர். காட்டாக --, - - இவற்றை வேறு படுத்த -- மற்றும் -- வுடன் இணைத்துள்ளனர். அதனால் -ந- என உச்சரிக்கையில் நுணிநாக்கானது முன்பல், மற்றும் அண்ணத்தில் (மேல்தாடை?) ஒட்டி கீழிறங்கவேண்டும். -- என உச்சரிக்கையில் நாக்கு சிரிது மடங்கி அன்னத்தின் பின்புறம் துவங்கி முன்பற்க்கள் நோக்கி கீழிறங்கவேண்டும்.
இப்பொழுது -நாணயம்- என உச்சரித்துப் பாருங்கள். மனநிறைவாக இருக்கும்.

இதன் மூலம் எனக்கெழுந்துள்ள ஐயம்:

எழுதுகையில் ஏன் எப்பொழுதும் -ந- வானது சொல்லின் முதலில் வருகிறது. ஏன் -ண- வருவதில்லை? விதியே அப்படித்தானா அல்லது ஓலைச்சுவடிகளிலிருந்த பழைய எழுத்துருக்களிலிருந்து நாம் வட்டெழுத்துக்கு மாறியபொழுது ஏற்ப்பட்ட/ஏற்ப்படுத்தப்பட்ட பிழையா?!

மேலும் என்னை சிந்திக்கத் தூண்டுபவை:
1. --, - - இவற்றின் ஒலி வேறுபாடு -  அதன் ஒலிவிதிகள். சமஸ்கிருதத்தில் றவை உயிரெழுத்தாக்கியது ஏன்?
2. எதை மனதில் வைத்து -ழ- வை design செய்திருக்க வேண்டும்?

எத்தனையோ இலக்கியச்செல்வங்களும் அறிவியற்ச்செல்வங்களும் நிறைந்திருக்கும் தமிழில் ஒரு மொழியை பிறவிச்செவிடரும் (காது கேட்க முடியாவிடில் பேச்சு/உச்சரிப்பு வராது) பிழையின்றி உச்சரிக்கும்படி கற்பிப்பதற்கு ஏதேனும் நூல் உறுதியாக இருந்திருக்க வேண்டும். தகவல் தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள். நன்றி.

இதே நூல் வடமொழி இயற்றுவதற்கும் உதவியிருக்கும் என்பது எனது கற்பனையான instinct.

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! தமிழை சரியாக இசைப்போம், ஒலிப்போம், உச்சரிப்போம். தமிழ் தமிழாக வாழ வளர முனைபோடு இருப்போம்.

4 comments:

  1. certain points I do not agree with you..
    http://chitrasekaran.blogspot.com/
    http://typicalsouthindian.blogspot.com/

    but the above blogs are worth to read.. Please write more.. as you said it is very rare people give worthy tips which is useful to society..
    I liked your blog.

    anbuda, Balu K

    ReplyDelete
  2. Which are the points that you don't agree with?

    ReplyDelete
  3. Thanks for your post.

    அன்னம் => அண்ணம் என வர வேண்டும்

    ReplyDelete