Sunday, August 24, 2008

தமிழைப் பற்றி தமிழில் - 2

தமிழ் மொழி மிகத்தொண்மையாயினும், அதன் எழுத்து வடிவம் மிகவும் புதியது. பல்வேறு காலக்கட்டங்களில் பலவிதமான வடிவங்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன (ஆதாரம்). தற்பொழுது வழக்கத்திலுள்ள எழுத்து முறை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பயன்பாட்டில் உள்ளது. அரிச்சுவடி எதுவாகினும், தமிழின் உச்சரிப்பு மாறக்கூடாது. முடிவில் அதுவல்லவா மொழி?! நான் தமிழ் என்று இந்த அரிச்சுவடியில் எழுதினாலும், Tamil/Thamiz என ஆங்கில அரிச்சுவடியில் எழுதினாலும், அதன் உச்சரிப்பு மாறாதல்லவா!

நான் தமிழ் கற்க தொடங்கிய காலத்திலிருந்தே தமிழை தவராக உச்சரித்ததில் வெட்கப்படுகிறேன். அது தமிழை எனக்கு கற்றுத்தந்தவர்களின் பிழையாகினும், என்னால் அதைத் திருத்திக்கொள்ள சில நாட்களுக்கு முன்புதான் காலம் கைகூடியது. தமிழின் ஆய்த எழுத்தைத்தான் குறிப்பிடுகிறேன்.

சிருவயதிலிருந்தே வடமொழி பயின்றதால், தமிழையும் அதனையும் ஒப்பிட்டு செய்து பழக்கம் எனக்கு. அதனாலோ என்னவோ, தமிழில் இருந்துதான் வடமொழி தோன்றியிருக்கும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. அதற்கு இடைஞ்சலாக என்னுள் எழுந்த கேள்வி, தமிழில்தான் ஹ, ஷ ஒலிகள் இல்லையே என்பதாகும். தமிழ்நாட்டில் எவரொருவரைக் கேட்பினும் ஆய்த எழுத்தை (ஃ) அக்கு என்றே உச்சரிப்பர். அக்கு என்று எழுதுவதை விட்டு, எதற்காக ஒரு ஒலியை உருவாக்கவேண்டும்? அதற்கு இலக்கணத்தில் பல கோட்பாடுகள் வேறு. என்ன கொடுமை சரவணன் இது? கூர்ந்து சிந்தித்தால், அதன் உச்சரிப்பு கண்டிப்பாகத் தவறு என்றே உணர்வோம். ஃ என்பதனை ஹ் என்றே உச்சரிக்க வேண்டும். நமது இலங்கை சகோதரர்களும் அதனை அப்படித்தான் உச்சரிக்கின்றனர். நாம்தான் மொழிதிரிபால் தாய்மொழியையே மாற்றி உச்சரித்து, அதில் பாடல்கள் வேறு எழுதி தமிழை கொன்று, மென்று அவமதிக்கிறோம். கடந்த பதிவில், அஃது என்பதன் உச்சரிப்பை இதனுடன் ஒப்பிட்டால் விளங்கும்.

ஒரு மொழியின் செழுமைக்கு அதன் இலக்கண கட்டமைப்பும், இலக்கியப் படைப்புகளும் எவ்வளவு பங்காற்றுகின்றனவோ, அதை விட அதிக பங்கு அதனை உச்சரிப்பதற்கு உண்டு. இலக்கணம் ஒரு மொழிக்கு அழகைக் கொடுத்து இலக்கியம் அவ்விலக்கணத் தாங்கி தன் மொழியின் அழகை மக்கள் உணர எடுத்துரைப்பதால்தான் அதன் அருமையும் பெருமையும் நம்மால் உணர முடிகிறது. ஆதலால் நாம் நம்மொழி மென்மேலும் வளரவேண்டுமென என்னுகிறோம்.

பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்
திருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து, ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலேவளருகின்றாள்

இப்பாடலை இயற்றியது யார்  என்றெனக்குத் தெரியாது. நினைவில் நிற்பதால் எழுதுகிறேன். தமிழ்த்தாய் வாழ்த்தாக நான் பன்னிரெண்டாம் வகுப்பில் பயின்றது. நம் மொழி மேலும் வளர வேண்டும் என்று விரும்பினால் மட்டும் போதாது. அது உயிருடன் இருக்க முதலில் அதன் உச்சரிப்பு மற்றும் பயன்பாடு சரியாக இருத்தல் வேண்டும். இன்றைய காலகட்டத்தில், இதுவே இன்றியமையாதது. திருக்குறளைப் போன்று இன்னொரு நூலில்லை என்று மார்தட்டும்முன், அதற்கு இணையாக ஏன் இன்னும் படைப்புகள் வரவில்லை  என்பதனை சிந்திக்கவேண்டும். மொழித்திரிபு அதன் எல்லைகளைக் கடந்து இன்று மெட்ராஸ்-தமிழ் என்று ஒரு அவலம் உருவாவதற்கு வித்திட்டுள்ளது.

உலகமயமாக்கலாலும் பிறமாநிலத்தவரின் வருகையாலும் நம் மொழியின் உச்சரிப்பு நாளுக்கு நாள் திரிந்து கொண்டே இருக்கிறது. சினிமா என்னும் வர்த்தகம் கலை என்னும் கட்டுப்பாட்டை இழந்தபின்பு மக்களுக்கு தூய தமிழ்ப்பேச்சைக் கொண்டு செல்லும் சாதனங்கள் மிகமிக குறைவு. இதை உணர்ந்த மிகச் சிலர் (கொங்கு நாட்டில்) இன்றும் பொது இடங்களில் தூயதமிழிலேயே உரையாடுவதும், அவர்களை பிறர் ஏளனம் செய்வதும் நான் நேரில் கண்டது. ஈரோட்டிலிருந்து கொயம்புத்தூர் செல்கையிலே ஒரு பயணி நடத்துனரிடம் "நடத்துனரே, கருமத்தம்பட்டிக்கு ஒரு பயனச்சீட்டு கொடுங்கள்" என்றதும் அதனைத்தொடர்ந்து பேருந்தில் எழுந்த முனுமுனுப்பும், நக்கலான சிரிப்புச்சத்தமும் அம்மனிதரின் மனதைப் புண்படுதியிருந்தால் அவ்வடு நம்தமிழ்த்தாய் மீதுதான் இருக்கும். தூயதமிழில் உரையாடுவதை இனியாவது நாம் ஊக்குவிக்க வேண்டும், நாம் நம் அடையாளங்களை மறக்கும்முன், நம்மக்களே அவற்றை மறைக்கும்முன்!

4 comments:

  1. buddy, nice one da !!! keep posting..

    ReplyDelete
  2. எங்க தமிழம்மாக்கள், ஐயாக்கள் ஃ எழுத்தை சரியா தான் உச்சரிக்க சொல்லிக் கொடுத்தாங்க. நிறைய மக்கள் அதை அக்குன்னு நினைச்சுக்கிறது வருத்தம்தான்.

    பேச்சுத் தமிழ் பார்க்கவும்

    ReplyDelete
  3. Dei...sooper content...but konjam tamil la puriyira mathiri eluthi iruntha innum nala irunthiukum....:-(

    ReplyDelete
    Replies
    1. romba late aana comment ku rombavum late aana reply.. :)
      mavane idha tamil puriyalayaadaa?? konne poduven..

      Delete